குஷ்பு as மணியம்மை
இது குறித்து எழுத நினைத்து, நேரமின்மையால் இப்போது தான் பதிகிறேன்.
சமீபத்திய குமுதம் இதழில், சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன், மீண்டும் காரசாரமாக, குஷ்பு மணியம்மையாக நடிப்பதை எதிர்த்து பேசியிருக்கிறார் ! ஒருவர் மனைவியை, இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருப்பவரை 'சிங்காரி குஷ்பு' என்று நாகரீகமாக வர்ணிப்பது தான் தமிழ் பண்பாடு போலும் ! இதற்கு முன், ஒரு பேட்டியில் (இட்லி வடை பதிவில் உள்ளது) குஷ்புவைப் பற்றி 'மும்பையில் இருந்து சம்பளத்துக்கு நடிக்க வந்தவர்', 'ஆபாசம், தொடை, தொப்புள் காட்டி நடித்தவர்' என்றும், இன்ன பிறவும் கூறியவர். இவர் சம்பளம் வாங்காமல் தான் மக்கள் சேவை செய்கிறார் போலும் ! குஷ்பு மணியம்மையாக நடிப்பதை எதிர்த்துப் பேசுவது ஒருவரின் உரிமை தான் என்றாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சட்டமன்ற உறுப்பினர் கண்ணியம் தவறி இப்படிப் பேசுவது நிச்சயம் சரியில்லை. இப்பிரச்சினையில், அரசியல் கட்சி என்ற வகையில், பா.ம.க வின் நிலைப்பாடு என்ன என்பது தெரியவில்லை. டாக்டர் ராமதாஸ் இப்பிரச்சினை குறித்து கருத்து எதுவும் கூறினாரா என்றும் தெரியவில்லை.
குஷ்பு மணியம்மையாக நடித்தால் தமிழ் சமுதாயத்திற்கே கேடு என்பது போல் வேல்முருகன் பேசியிருக்கிறார் ! ஏற்கனவே, கீரன் ஒரு பின்னூட்டத்தில் 'நடிப்பு வேறு, நடிப்பவரின் தனிப்பட்ட வாழ்க்கை / கருத்து வேறு' என்று அழகாகக் கூறியிருக்கிறார். இவற்றையெல்லாம், எதிர்ப்பவர்கள் எண்ணிப் பார்த்ததாகத் தெரியவில்லை, எண்ணியும் பார்க்க மாட்டார்கள் ! ஏதாவது ஒரு கலாட்டா செய்வது இவர்களுக்கு வாடிக்கையாகிப் போன ஒன்று. குஷ்பு மணியம்மையாகவோ மார்கிரெட் தாட்சராகவோ நடிப்பது பற்றிய பிரச்சினையை விட, சட்டமன்ற உறுப்பினர்கள் கவனிக்க வேண்டிய பிரச்சினைகள் அனேகம் உள்ளன. சமூகத்தின் பல தளங்களில் ஒரு பாசிச மனப்போக்கு விரவியிருப்பதே, இது போன்றவற்றுக்கு ஆதாரம்.
குஷ்பு மணியம்மையாக நடிப்பதை தமிழ் சமுதாயமே ஏற்காது என்று கூறுபவர்களுக்கான பதில், சாதாரண பொதுமக்கள் இது குறித்து விசனப்படவும் இல்லை, போராட்டம் என்று களத்தில் குதிக்கவும் இல்லை என்பதே ! மக்கள், தங்கள் வாழ்வு குறித்த வேறு பல பிரச்சினைகளை தினம் எதிர் கொள்ள வேண்டியுள்ளது ! சில பத்திரிகைகள் தான் இது பற்றி வலிய எழுதியும், பேட்டி எடுத்தும் விஷயத்தை ஊதிப் பெரிதாக்கி குட்டையைக் குழப்புகின்றன என்றும் தோன்றுகிறது.
ஓரிரு மாதங்களுக்கு முன் தான், பெரியார் படத்திற்கு அரசு மானியம் வழங்குவது தொடர்பாக எழுந்த பிரச்சினை அலையடித்து ஓய்ந்தது. இப்போது இது ! என்னத்த சொல்ல! நடக்கும் கூத்தைப் பார்த்தால், பெரியார் உயிரோடு இருந்தால், தலையிலடித்துக் கொண்டிருப்பார் ! திரு. வேல்முருகன் தமிழ்நாட்டுப் பெண்கள் யாருமே கற்போடு இல்லை என்று குஷ்பு பேசியதாகக் (குமுதம் இதழில்) கூறியிருப்பது, exaggeration அன்றி வேறென்ன ? பிரச்சினையை லேசில் அடங்க விட மாட்டார்கள் போல் இருக்கிறது. இப்பிரச்சினையில் சீமானும், சத்யராஜும் பாராட்டப்பட வேண்டியவர்கள். குஷ்பு பாத்திரத்திற்கு ஏற்றவர் என்றும், தேர்ந்த நடிகை என்றும் வெளிப்படையாகக் கூறியிருப்பது ஆறுதலான விஷயம். திருமா ஆதரவு / எதிர்ப்பு என்று எந்த நிலையையும் எடுக்காமல் நடுநிலையாக ஏதோ பேசி விட்டுப் போய் விட்டார்.
மணியம்மையாக யார் நடிப்பது என்று தீர்மானிப்பது (அரசு மானியம் தந்திருந்தாலும் கூட !) ஞான ராஜசேகரன் என்ற சிறந்த படைப்பாளியின் கலைச் சுதந்திரம் ! அதில் தலியிட எவருக்கும் உரிமையில்லை. அவர் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக பெரியார் படத்து பாத்திரப் படைப்புகளைப் பற்றியும், படமெடுப்பது குறித்தும், பலவும் சிந்தித்து அயராது செயல்பட்டு வருபவர். முக அமைப்பு, நடிப்பாற்றல் போன்றவற்றை ஆய்ந்து நடிக / நடிகையரை தேர்வு செய்து வருகிறார். இது போன்ற அனாவசியப் பிரச்சினைகள் அவரை சோர்வடைய வைத்து, படமெடுப்பதை பாதிக்கும்.
பிரச்சினைக்காக பின் வாங்காமல் தான் பெரியாரின் மனைவியாக நடித்தே தீருவேன் என்றும், மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன் என்றும் குஷ்பு (குமுதத்தில்) பேசியிருப்பது அவரது மனவுறுதியை காட்டுகிறது. குஷ்பு மணியம்மையாக நடிப்பதை எதிர்ப்பதின் ஆதாரம் ஆணாதிக்க மனோபாவமின்றி வேறெதுவும் இல்லை ! பெண்ணியம் பேசுபவர்கள் / இயக்கங்கள் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்து தீவிரமாக எதிர்த்தாலொழிய இது போல் வேண்டாத பிரச்சினைகளை எழுப்புபவர்கள் ஓய மாட்டார்கள்.
எ.அ.பாலா
* 228 *
24 மறுமொழிகள்:
பகுத்தறிவு படி குஷ்பூ மணியம்மையாக நடிப்பதை நாங்கள் எதிர்க்கிறோம். தமிழன் என்ன மானம் கெட்டவனா? தமிழச்சியின் கற்பை குஷ்பூவின் வாயில் வைத்திருந்தோம். குஷ்பூ வாய் திறந்ததும் அது விழுந்து விட்டது. இப்படி தமிழச்சியின் கற்பை பாதுகாக்க தெரியாத குஷ்பூ எப்படி மணியம்மையாக நடிக்கலாம். விட மாட்டோம். போர் போர். எங்கே தண்டவாளம்? தலை வைக்கணும். எங்கே பெட்ரோல்? தீக்குளிக்கணும். பழைய செருப்பை பொறுக்கணும். நிறைய வேலை இருக்கு எங்களுக்கு.
பாமகவின் பாசிச போக்கு தமிழகத்துக்குப் பெரும் தலைவலியாக மாறும் முன்னால் மக்களும் பிற கட்சிகளும் விழித்துக் கொண்டு அவர்களை ஓரங்கட்டி விடுவது நல்லது. தம்மை கண்ணை மூடிக் கொண்டு நம்பும் குறிப்பிட்ட சமூக ஆதரவில் இந்த ஆட்டம் போடும் இவர்களது போக்கு வரலாற்றுக்குப் புதிதல்ல. மகாராஷ்ட்ராவில் சிவசேனையை நமது காலத்திலேயே பார்த்திருக்கிறோம். இது போன்ற ஒரு இயக்கம் பொது வாழ்வில் இருப்பது, அவர்கள் வேறு எத்தனை நல்ல பணிகளைச் செய்தாலும் சமூகக் கட்டமைப்புக்கு அபாயகரமானது.
அன்புடன்,
மா சிவகுமார்
*******
Edited and published by Administrator
************
there are many Kusbu in Tamil Film Industry. but T... there are many Kusbu in Tamil Film Industry. but This Kusbu hurt tamil People. .........?. She take advantage . Unfortunately many young people follow this people.
thats way Dr. Ramodas protest it.
we have many actress in India. we can select. If Kusbu dies, do you want to close the film Industry?.
we can select good Actress in India.
Singapore Girl
(Anonymous) 2:44 PM
***********************
அடடா,
அடடா, என்னே ஓர் அறச்சீற்றம் :)))))))) நன்றி !
கீரன்,
வாங்க, கருத்துக்களுக்கு நன்றி. உங்கள் பின்னூட்டத்தை பார்த்த பின் தான் இப்பதிவே எழுதினேன் !
//பெரியார் படத்தில் குஷ்பு நடிப்பது என்பது இயக்குநரின் விருப்பம் சார்ந்தது என்று சொன்னாலே குஷபு ரசிகர்கள் என்று கூறிவிடுகிறார்கள். அப்படியிருக்க ஒரு பெண் வெளிப்படையாக குஷ்புவை ஆதரித்தால் என்ன ஆகும். அவளும் விபச்சாரி என்று பகிரங்கமாகக் கூறிவிடுவார்கள் இவர்கள்.
//
அதானே, இங்க பிரச்சினையே ! யாருமே தயங்குறாங்க.
மா.சிவகுமார்,
கருத்துக்களுக்கு நன்றி. பாசிசத்தை வளரவிட்டால் மேலும் மேலும் பிரச்சினை தானே !
Singapore girl,
நன்றி. பேசாம தமிழிலேயே எழுதலாமே :))
********************************
எ.அ.பாலா
மணியம்மையாக யார் நடிக்க வேண்டும் அப்படீன்னு ஒரு வாக்கெடுப்பு நடத்தினா என்ன...இல்லை வேல்முருகன் சொல்லும் தன்மான தமிழச்சி யாரையாவது போடலாம்...பிரச்சினை ஓய்ந்து விடும்...பெரியாரை விட்டுடுங்கப்பா....அவர் கொள்கைகளை மதிங்க...
இந்த இடத்தில் முன்னா பாய் -2 ல் வந்த ஒரு காட்சி...
காந்தியின் ஆத்மாவிடம் கேள்வி ஒன்று கேட்கப் படுகிறது "என் வீட்டின் பக்கத்தில் ஒரு சிறுவன்
உங்களுடைய சிலையின் ஒரு கையை உடைத்து விட்டான் அவனை என்ன செய்வது?"
இதற்கு காந்தி "அந்த சிறுவன் கையில் இன்னொரு கல் கொடுத்து என் சிலை முழுவதையும் உடைத்து விட சொல்லுங்கள். நாட்டில் எனக்கு வைக்கப் பட்டிருக்கும் எல்லா சிலைகளையும் உடைத்து விடுங்கள். எனக்கு அங்கீகாரம் செயவதாக இருந்தால் என் கருத்துக்களை மனதில்
கொள்ளுங்கள். என் படத்தை ஆபிஸில் மாட்டிக் கொண்டு அதே இடத்தில் லஞ்சம் வாங்குவதால் என்ன பயன்? என் கருத்துக்களை மனதில் வையுங்கள் என் படம் எல்லாம் தேவையில்லை." என்று கூறுவதாக அமைந்திருக்கிறது ஒரு காட்சி.காந்தி உயிருடன் இருந்திருந்தால் இதையே தான் கூறியுருப்பார் என்றே எண்ணுகிறேன். மேலும் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் காந்தி என்ற மனிதரா முக்கியம் அவர் என்ன அஹிம்சை, அன்பு வழி எல்லாம் முதல் முதலாக போதித்தவரா என்ன? இல்லையே காந்தி என்ற மனிதரிடம் குறைகள்
உண்டு ஆனால் அவர் போதித்த அஹிம்சையில், அன்பு வழியில் குறைகள் இல்லையே அதனால்
காந்தி என்ற மனிதரை விடுத்து அஹிம்சை அன்பு செலுத்துவதில் தவறில்லையே என்பதாக
எனக்கு இந்தக் காட்சி பட்டது."""
மேற்கண்ட அருமையான விமர்சனத்தை குமரன் "http://rasithathu.blogspot.com/2006/09/lage-raho-munnabhai.html" பதிவுல எழுதியிருக்காரு...இதுல காந்தியை எடுத்துட்டு பெரியாரையும் அகிம்சையை எடுத்துட்டு முற்போக்கு கொள்கைகளையும் போட்டு பாருங்க...அப்பவும் சரியா வரும்...அதை விட்டுட்டு பெரியார் சிலைக்கு சந்தனம் பூசுனவன் பன்னீன்னு ஒரு 80 வயசு முதிர்ந்த முதலமைச்சர் சொல்கிறார்...இதுதான் இவர்களது முதிற்சி...இவர்கள் வழித்தோன்றல்கள் மட்டும் எப்படி இருப்பார்கள்....
சிலைக்கு சந்தனம் பூசினா பெரியார் சாமியாயிடுவார...குஷ்பு மணியம்மையாக நடித்தால் மணியம்மை கற்புக்கு களங்கம் வந்து விடுமா.....நேரம்டா சாமி :)))
Anonymous,
வாங்க, கருத்துக்களுக்கு நன்றி.
//"..என் படத்தை ஆபிஸில் மாட்டிக் கொண்டு அதே இடத்தில் லஞ்சம் வாங்குவதால் என்ன பயன்? என் கருத்துக்களை மனதில் வையுங்கள் என் படம் எல்லாம் தேவையில்லை...." //
என் படத்தை ஆபிஸில் மாட்டிக் கொண்டு அதே இடத்தில் அணுக்குண்டு செய்யத் திட்டம் தீட்டுவதிலும் அடுத்தவனுக்கு அகிம்சை சொல்வதிலும் என்ன பயன்? என் கருத்துக்களை மனதில் வையுங்கள் என் படம் எல்லாம் தேவையில்லை."
//என் படத்தை ஆபிஸில் மாட்டிக் கொண்டு அதே இடத்தில் அணுக்குண்டு செய்யத் திட்டம் தீட்டுவதிலும் அடுத்தவனுக்கு அகிம்சை சொல்வதிலும் என்ன பயன்? //
தன்னை கொல்ல வரும் பசுவையும் கொல்லலாம் என்று காந்தி சொன்னது தெரியாது போலும்?கோழையாக இருப்பதை விட ரவுடியாக இருப்பது மேல் என்று காந்தி சொன்னதும் தெரியாதா?
பாலா,
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்து தாக்கிருக்கீங்க.அருமையா எழுதிருக்கீங்க.வாழ்த்துக்கள்
KUBU illaviddal seththup poveengala?.
செல்வன்,
பாராட்டுக்கு நன்றி.
மோகன் காந்தி,
சத்யராஜ் பேட்டியை எடுத்து இட்டதற்கு நன்றி.
அன்பு அனானிமஸ்,
//KUBU illaviddal seththup poveengala?.
//
தெரியலையேப்பா (நாயகன் கமல் ஸ்டைலில் படிக்கவும்:))
எ.அ.பாலா
'அணுக்குண்டு' Anonymous,
Thanks :)
//..தன்னை கொல்ல வரும் பசுவையும் கொல்லலாம் என்று காந்தி சொன்னது தெரியாது போலும்?கோழையாக இருப்பதை விட ரவுடியாக இருப்பது மேல் என்று காந்தி சொன்னதும் தெரியாதா?..//
செல்வன்,
பசுக்கதை கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் ரவுடிக்கதை கேள்விப்படவில்லை. இன்றைய பீ.பீ.சி தமிழோசையில் 'காந்தீயம்' பற்றிய மதுரை காமராஜர் பல்கலைக்கழக காந்திய சிந்தனை குறித்த பேராசிரியர் எஸ்.ஜெயப்பிரகாச்ம் அளித்த பேட்டியை கட்டாயம் கேட்கவும் அதில் அகிம்சை பற்றியும் அதன் இன்றைய நிலை, நர்மதா நதி அணை மற்றும் ஈழப்போருக்கும் அகிம்சைக்குமான தொடர்புகள் பற்றிக்கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எந்நிலையிலும் அவர் பசுக்கதையோ ரவுடிக்கதையோ விடவில்லை!!!!! அதுமட்டுமல்ல எந்தஒரு கேள்விக்கும் தெளிவான பதிலையும் தரவில்லை இந்த 'பேராசிரியர்' !!!
//தன்னை கொல்ல வரும் பசுவையும் கொல்லலாம் என்று காந்தி சொன்னது தெரியாது போலும்//
நிஜமா எனக்கு தெரியாதுங்க ஏன்னா அவரு அப்படி சொல்லவில்லையே :( அவரு சொன்னது ஒடம்புக்கு முடியாம துடிக்கிர கன்னுகுட்டிய பாத்துகிட்டு இருக்கிரதை விட அதை கொன்னுபோடலாம் அப்டீன்னுதான் சொன்னார் :)
கூகிளில் எதையோ தேடிக் கொண்டிருந்த சமயம் இந்தப் பதிவைப் பார்த்தேன் என்னோட பதிவில நான் எழுதி இருக்கறதை எடுத்து யாரோ எழுதி இருக்கிறாங்க ஆச்சர்யமா இருக்கு ஏங்க அங்க இருக்கறதை எடுத்து எழுதறீங்க ஒரு பின்னூட்டம் போட்டா எனக்கு கொஞ்சம் ஊக்கமா இருக்குமில்லை.
பதிவு பத்தி, பதிவு நல்ல நோக்குடன் எழுதப் பட்டிருக்கிறது.
செல்வன் ஒரு கமெண்ட் கொடுத்திருந்தார்.
///
தன்னை கொல்ல வரும் பசுவையும் கொல்லலாம் என்று காந்தி சொன்னது தெரியாது போலும்?கோழையாக இருப்பதை விட ரவுடியாக இருப்பது மேல் என்று காந்தி சொன்னதும் தெரியாதா?
///
என்னடா நாம எழுதறது ஒண்ணுமே தெளிவா இல்லையான்னு ஒரு சந்தேகம்.
காந்தி இதையும் சொன்னார் அதையும் சொன்னார் இப்படியும் பண்ணினார் அப்படியும் பண்ணினார் என்றெல்லாம் அவர் சொன்ன கருத்தை மதிக்காம விட்டிடாதீங்க. காந்தி காந்தியின் மற்றக் கொள்கைகள் தவறா இருக்கலாம். அவருடைய ஒரு கொள்கையான அன்பு அறவழியில் தவறில்லை ஆகவே அதை பின்பற்றுங்கன்னு தானே எழுதி இருக்கேன். காட்சியும் அதைத் தானே சொல்லுது.
ஆனா இங்க இப்படி ஒருத்தர் மறுபடியும் காந்தி அதைச் சொன்னார் இதை சொன்னார்ன்னு சொல்றாரே நீ எழுதறதை உன்னைத் தவிர யாருக்குமே புரியாது போல என்று எண்ணிக் கொண்டேன்.
கற்பு என்றால் கிலோ என்னவிலை என்று கேட்கும் பார்ப்பன நாய்கள் குஸ்புவுக்கு ஆதரவாக பதிவு எழுதுவது ஒன்றும் வியப்பான செயல் அல்ல!
காந்தி இதையும் சொன்னார் அதையும் சொன்னார் இப்படியும் பண்ணினார் அப்படியும் பண்ணினார்
டால்ஸ்டாயினால் பாதிக்கப்பட்டாலும் காந்தி அவர் சொந்த புத்திக்குத் தோன்றியதைத்தான் செய்தாரே ஒழிய, டால்ஸ்டாய் ஒரு சூழ்நிலையில என்ன பண்ணினார் என்றெல்லாம் யோசித்துக்கொண்டு நிற்கவில்லை.
நீங்கள் மட்டும் ஏன் அவர் சொன்னாரா இல்லையா என்று விவாதிக்கிறீர்கள்?
இப்படி இருந்தால் மகாத்மாக்கள் உருவாவது கடினம்தான்.
///
நீங்கள் மட்டும் ஏன் அவர் சொன்னாரா இல்லையா என்று விவாதிக்கிறீர்கள்?
///
muse என்னையா கேட்டிருக்கிறீர்கள். என்னை கேட்டிருப்பீர்களாயின் நான் ஒழுங்காக எழுத வேண்டும் என்பதற்கு இன்னொரு உதாரணம் இது. நானும் நீங்கள் சொல்வதையேதான் சொல்கிறேன்.
அவர் எதேதோ சொல்லி இருக்கார் அதில ஒண்ணு அன்பு அகிம்சை அதை அவரா முதன் முதலில் உபதேசித்தார் ஆகையால் அவர் சொன்னாருன்னு அதை யாரும் ஒதுக்கவும் வேண்டாம் இல்லை பின்பற்றவும் வேண்டாம்.
அன்பு அகிம்சை கொள்கைகள் உயர்ந்தது. அதை பின்பற்றி அதை விளம்பரப்படுத்தியவர்களில் காந்தியும் ஒருவர்.
கொள்கைகள் உயர்ந்தது என்பதால் பின்பற்றலாம் காந்தி சொன்னாருங்கறதுக்காக இல்லை என்றே சொல்லி இருக்கிறேன்.
இதுவும் புரியலை என்றால் என்னால் ஒண்ணுமே செய்ய முடியாது.
என்னைக் கேட்டால் பெரியார் படத்தை சத்தியராஜ், குஷ்பு-விற்கு பதிலாக புதுமுகங்களை வைத்து எடுப்பது உத்தமம். எனென்றால் படம் வெளிவந்த பிறகு சத்தியராஜும், குஷ்புவும் மட்டுமே தெரிவார்களே தவிர பெரியாரும், மணியம்மையும் தெரியமாட்டார்கள். உதரணமாக, இந்த இயக்குனர் எடுத்த பாரதி, காமராஜ் படங்களை பார்த்தாலே உங்களுக்கு புரியும்.
சமீபகாலமாக மற்றவர்களை நக்கல் செய்யும் காதாபாத்திரத்திரங்களிலேயே நடித்து வரும் சத்தியராஜை அவர் எவ்வளவுதான் சிறப்பாக இந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் சராசரி ரசிகர்களுக்கு அவர் "நக்கல்" சத்தியராஜாகத்தான் தெரிவார். இதே போலத்தான் குஷ்ப்புவும்.
காந்தி படம் எடுத்தபோது கூட அவரின் கதாபாத்திரத்திற்கு இந்தியரல்லாத ஒரு புதுமுகம் தேவைப்பட்டது.எல்லொராலும் அறியப்பட்ட இந்திய நடிகர் ஒருவர் நடித்திருந்தால் அது இந்த அளவிற்கு வந்திருக்குமா என்பது சந்தேகம் தான்.
CT, mahendran, kumaran eNNam, muse,
nanRi !
jayakumar,
You have made a valid point ! Thanks.
Jeyakumar is right.
EEN pala MUDDAL PAYALUKALUKU ethu puriyavillai?. Kusbu pasama?
Nanri Jeyakumar
//என்னைக் கேட்டால் பெரியார் படத்தை சத்தியராஜ்,
குஷ்பு-விற்கு பதிலாக புதுமுகங்களை வைத்து எடுப்பது உத்தமம்.
எனென்றால் படம் வெளிவந்த பிறகு சத்தியராஜும்,
குஷ்புவும் மட்டுமே தெரிவார்களே தவிர பெரியாரும்,
மணியம்மையும் தெரியமாட்டார்கள்//
good point
காந்தியாக நடித்த ben kingsley ஒரு பேட்டியில் கூறியது.
அப்போதும் நம் பாராளுமன்ற தேச பக்த எம்பி க்கள், காந்தியாக
ஒரு வெள்ளைக்காரர் நடிப்பதா, இது அனுமதிக்கக்கூடாது என்று
கூச்சல் போட்டனராம்.அப்புறம் அவர் பாதி குஜராத்தி என்பதால்
ஏற்றுகொண்டார்களாம்.அவருடைய அசல் பெயர் krishna bhanji
aathirai,
Thanks for your comments !
ஷோக்காளி,
நன்றி.
Ungalukku Kusbu paiththiyama?
Puthu nadikaijaith thedu.
Post a Comment